ஆதாரத்துடன் ரஞ்சித்தை பிடித்த சூர்யா, ஆனால் நந்தினிக்கு ஏற்பட்ட சோகம்... மூன்று முடிச்சு சீரியல் புரொமோ

By Yathrika May 28, 2026 07:40 AM GMT
Report

மூன்று முடிச்சு

சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக கடந்த சில மாதங்களாக ரசிகர்களை அடுத்து என்ன நடக்கப்போகிறது என புலம்ப வைக்கும் சீரியல் தான் மூன்று முடிச்சு.

எல்லா கேவலமான வேலையையும் செய்யும் ரஞ்சித் தன்னை நல்லவன் போல் காட்டி ஒரு குடும்பத்தையே நம்ப வைக்கிறார். அவர்களின் வீட்டுப் பெண்ணையும் திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார்.

ஆதாரத்துடன் ரஞ்சித்தை பிடித்த சூர்யா, ஆனால் நந்தினிக்கு ஏற்பட்ட சோகம்... மூன்று முடிச்சு சீரியல் புரொமோ | Moondru Mudichu Serial Promo 28 May 2026

இதற்கு இடையில் ரஞ்சித் மீது சந்தேகம் எழ நந்தினி அவரை கண்காணிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக நந்தினிக்கு ரஞ்சித் செய்யும் கேவலமான வேலைகளின் ஆதாரங்கள் கிடைக்கிறது.

புரொமோ

ஆனால் நந்தினி சொல்வதை எப்போதும் கேட்காத சுந்தரவல்லி தனது மகன் சூர்யாவை கூட நம்பாமல் ரஞ்சித் சுரேக்கா திருமணத்தை நடத்தி வைக்க துணிந்தார். இப்போது திருமண நாளும் வந்துவிட்டது, மண மேடையில் ரஞ்சித் சுரேக்கா அமர பாத பூஜைகள் எல்லாம் நடக்கிறது.

ஆதாரத்துடன் ரஞ்சித்தை பிடித்த சூர்யா, ஆனால் நந்தினிக்கு ஏற்பட்ட சோகம்... மூன்று முடிச்சு சீரியல் புரொமோ | Moondru Mudichu Serial Promo 28 May 2026

இன்றைய எபிசோட் புரொமோவில், திடீரென ரஞ்சித் தாலிக்கட்டும் நேரத்தில் சூர்யா தாலியை தள்ளிவிட்டு ரஞ்சித்தை வெளுக்கிறார்.

பின் நந்தினி எல்லா உண்மைகளையும் கூற குடும்பமே ஷாக் ஆகிறார்கள். ஆனால் வசமாக சிக்கிக்கொண்ட ரஞ்சித் சுரேக்காவை துப்பாக்கி வைத்து மிரட்ட அப்போது எதிர்ப்பாரா விதமாக நந்தினியை சுட்டுவிடுகிறார்.

ஆதாரத்துடன் ரஞ்சித்தை பிடித்த சூர்யா, ஆனால் நந்தினிக்கு ஏற்பட்ட சோகம்... மூன்று முடிச்சு சீரியல் புரொமோ | Moondru Mudichu Serial Promo 28 May 2026

இன்றைய எபிசோடின் பரபரப்பான மூன்று முடிச்சு புரொமோ இதோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US