உடல்நிலை சரியில்லாத நந்தினிக்காக யாரும் எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்த சூர்யா... மூன்று முடிச்சு எமோஷ்னல் புரொமோ
மூன்று முடிச்சு
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.
தொடர் ஆரம்பித்த நாள் முதல் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ், டிஆர்பியிலும் டாப் 5ல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. கதையின் நாயகியாக ஸ்வாதி கொண்டே நடிக்க நாயகனாக நியாஸ் நடிக்கிறார்.
புதியதாக இணைந்து இந்த ஜோடிக்கு இப்போது ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிவிட்டனர்.
புரொமோ
சூர்யா-நந்தினி திடீரென திருமணம் செய்து இணைந்த ஜோடி, இவர்களது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், போராட்டங்கள் பற்றிய கதை. இப்போது கதையில் நந்தினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவருக்கு எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார் சூர்யா.
எப்போது மது பாட்டிலுடன் வீட்டிற்கு வருபவர் இப்போது விபூதியுடன் வருகிறார்.
இதில் நந்தினி மீது பாசம் வைத்துள்ள சூர்யா அவர உடல்நிலை குணமாக கோவிலில் அமர்ந்து பிச்சை எடுக்கிறார்.
இந்த எமோஷ்னல் புரொமோ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.