சன் டிவியில் சிங்கப்பெண்ணே-மூன்று முடிச்சு சீரியல்களின் மகா சங்கமம்... அட்டகாசமாக வந்த புரொமோ
சன் டிவி
சினிமா ரசிகர்கள் இப்போதெல்லாம் படங்களை தாண்டி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பட பாக்ஸ் ஆபிஸ் வசூலை தாண்டி சீரியல்களின் டிஆர்பி விவரத்தை காண ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே புத்தம் புதிய சீரியல்கள், விதவிதமான கான்செப்டுடன் ரியாலிட்டி ஷோக்கள் என அதிகம் வருகின்றன.

மகா சங்கமம்
இதில் புதிய வருடம் ஆரம்பித்ததில் இருந்து சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சியிலும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகின்றன.
சன் டிவியில் சமீபத்தில் செல்லமே செல்லம் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு இன்னொரு ஸ்பெஷல் விஷயம் வெளியிட்டுள்ளனர்.
அதாவது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல்களின் மகா சங்கமம் நடக்க உள்ளதாம். தற்போது மகா சங்கமத்தின் புரொமோ வெளியாகியுள்ளது, இதோ,