போதையில் உண்மையை உளறிய மூர்த்தி.. வசமாக மாட்டிய கயல் குடும்பம்! - கயல் சீரியலில் இன்று
கயல் சீரியலில் பிரபு கொலையை மறைக்க கயல் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். தங்கை ஆனந்தியை போலீசிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என திட்டம்போடும் அவர் பிரபு எங்கே போனான் என தெரியவே தேறியது என கூறி வருகிறார். அந்த விஷயம் மொத்த குடும்பத்திற்கும் தெரியும்.
இந்நிலையில் கயலின் அண்ணன் மூர்த்தியை அவரது வில்லன் பெரியப்பா தர்மலிங்கம் வீட்டுக்கு அழைத்து அவனுக்கு கூல்ட்ரிங்ஸில் சரக்கு கலந்து கொடுத்து, போதை ஏறியபின், நடந்தது என்ன என கேட்கிறார்.
உண்மையை உளறிய மூர்த்தி
மூர்த்தி போதையில் அனைத்து உண்மையையும் உளறி விடுகிறார். ஆனந்தி தான் கொலை செய்தது, கயல் அதை மறைக்க தேவையானதை செய்தார் என மூர்த்தி கூறிவிடுகிறார்.
இந்தியா கேட்டு வில்லன் குடும்பமே அதிர்ச்சி ஆகிறது. அதன் பின் தர்மலிங்கம் மற்றும் வடிவு இருவரும் சேர்ந்து போலீசுக்கு போன் செய்து வாக்குமூலம் வாங்கிய விஷயத்தை கூறுகின்றனர்.
அதன் பின் பிரபுவின் குடும்பம் மற்றும் எழிலின் அம்மா சேர்ந்து கயல் வீட்டிற்கு சென்று சண்டை போடுகிறார்கள். ஆனால் அப்போதும் கயல் தங்களுக்கு பிரபு பற்றி எதுவும் தெரியாது என கூறி சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய எப்சிடு நிறைவு பெற்றது.