நோ நோ நோ... விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணத்தில் பல கண்டிஷன்... என்னென்ன?
விஜய்-ராஷ்மிகா
சினிமாவில் கலக்கும் நட்சத்திர ஜோடிகள் பலர் நிஜத்திலும் இணைந்துள்ளார்கள்.
அப்படி விரைவில் நிஜ வாழ்க்கையில் இணையப்போகும் ராஷ்மிகா-விஜய் திருமணத்தை காண ரசிகர்களும் படு ஆவலாக உள்ளனர்.
விஜய்-ராஷ்மிகா இருவரும் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள், அப்போதே இவர்களின் ஜோடி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதன்பின் Dear Comrade, Kingdom போன்ற படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.

அதில் இருந்தே ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களும் அதற்கு ஏற்றார் போல் ஒன்றாக வெளியே செல்வது என இருந்தார்கள், ஆனால் காதலிப்பதாக மட்டுமே கூறவில்லை.
திருமணம்
இந்த நிலையில் இதுநாள் வரை ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்ட அந்த அறிவிப்பும் வெளியாகிவிட்டது. விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவிற்கு வரும் 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடக்க உள்ளதாம்.

இருவரும் திரையுலகில் இருந்தாலும் பிரபலங்கள் யாரையும் தங்களது திருமணத்திற்கு அழைக்கவில்லையாம், மொபைல் கண்டிப்பாக அனுமதி இல்லையாம். திருமணம் முடிந்த கையோடு இருவருமே ஒரு மாதம் சோஷியல் மீடியா மற்றும் சினிமா பணிகளில் இருந்து முழுமையாக விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு மார்ச் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளதாம்.
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri