தமிழ்நாட்டை ஆளும் ராக்கிபாய், Kgf 2க்காக இனி இப்படி நடக்கப்போகிறதா?- செம குஷியில் ரசிகர்கள்
கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியான ஒரு திரைப்படம் Kgf 2. பிரசாந்த் நீல் என்பவர் இயக்க யஷ் என்ற நாயகன் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக மக்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
பீஸ்ட் Kgf 2 வசூல் வேட்டை
பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 192 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது, ஆனால் Kgf 2 படம் ரூ. 700 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது.
படத்திற்கான கிரேஸ் மக்களிடம் அதிகரித்துவரும் நிலையில் படம் இன்னும் 2 வாரங்களுக்கு மிகவும் வெற்றிகரமாக ஓடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திரையரங்கு எண்ணிக்கை
விஜய்யின் பீஸ்ட் படத்தால் Kgf 2 படத்திற்கு தமிழகத்தில் கொஞ்ச திரையரங்குகள் தான் கிடைத்தன. சுமார் 350 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆன Kgf 2 படத்திற்கு இப்போது திரையரங்குகள் அதிகரித்துள்ளதாம்.
இப்போது படத்திற்கு கூடுதலாக 60 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாகுபலி படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடித்த Kgf 2- நாளுக்கு நாள் செம வசூல் வேட்டை

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
