2026ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்டும் இந்திய திரைப்படங்கள்.. டாப் 3ல் தமிழ் படம்..!!
2026
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அனைவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும். அதே போல் சினிமா ரசிகர்களுக்கு இந்த ஆண்டு அவர்கள் எதிர்பார்த்த படங்கள் எப்போது வெளியாகப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு கண்டிப்பாக இருப்பது வழக்கம்தான்.

அதிலும் இந்த 2026ஆம் ஆண்டு விஜய், ரஜினி, அஜித், சூர்யா, தனுஷ், ஷாருக்கான், யாஷ், ஜூனியர் என்.டி.ஆர் என பல உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரவிருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாபெரும் அளவில் உள்ளது.
எதிர்பார்க்கப்பட்டும் இந்திய படங்கள்
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்களின் பட்டியலை IMDB வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் இடம்பிடித்துள்ளது.

இதை தொடர்ந்து 10வது இடத்தில் பிரதீப் ரங்கநாதனின் Lik படம் இடம்பெற்றுள்ளது. டாப் 10ல் இடம்பிடித்துள்ள இரண்டு தமிழ் படங்கள் இவை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
1. கிங்
2. ராமாயணா
3. ஜனநாயகன்
4. ஸ்பிரிட்
5. டாக்சிக்
6. Battle Of Galwan
7. Alpha
8. துரந்தர் 2
9. பார்டர் 2
10. Lik
11. Fauzi
12. The Paradise
13. Peddi
14. டிராகன் (ஜூனியர் என்.டி.ஆர்)
15. லவ் & வார்
16. பூத் பங்களா
17. பென்ஸ்
18. ஷக்தி ஷாலினி
19. பேட்ரியாட்
20. ஓ ரோமியோ