தமிழில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்கள் ! இடம் பிடிக்காத விஜய், அஜித்..
இந்தியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்கள்
திரையுலகில் தற்போது ட்ரெண்டிங் விஷயம் என்றால் அது பான் இந்தியா திரைப்படங்களாக தான் இருக்க முடியும்.
அப்படி தெலுங்கில் RRR, கன்னடத்தில் KGF 2 உள்ளிட்ட திரைப்படங்கள் பான் இந்தியா அளவில் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
இதனால் கோலிவுட் வட்டார ரசிகர்கள் இங்கிருந்து ஒரு பான் இந்தியா ஹிட் படத்தை கொடுக்க துடித்து கொண்டுகிறார்கள். அப்படி அனைவரும் எதிர்பார்க்கும் திரைப்படம் என்றால் அது கமலின் விக்ரம் திரைப்படமாக தான் இருக்க முடியும்.

விஜய், அஜித் படங்கள்
இதற்கு முன் அப்படி பான் இந்தியா திரையுலகமே எதிர்பார்த்த தமிழ் திரைப்படம் கபாலி, அப்படத்தின் ட்ரைலர் ப்ரோமோஷன் உள்ளிட்ட விஷயங்கள் இந்தியளவில் பேசப்பட்டது.
ரஜினி மற்றும் கமல் படங்களை தவிர விக்ரமின் ஐ, கந்தசாமி மற்றும் சூர்யாவின் ஏழாம் அறிவு, அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
ஆனால் இதுவரை விஜய், அஜித் நடித்த எந்தஒரு திரைப்படமும் இந்தியளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியது இல்லை.

தொகுப்பாளினி டிடியா இது, புதிய ஹேர் ஸ்டைல் ஆளே மாறிவிட்டாரே- வைரலாகும் வீடியோ