இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில், இந்தியளவில் முதல் இடத்தை பிடித்த மாஸ்டர்..!
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் வரும் ஜனவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
அதுமட்டுமின்றி இப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்றது, அதனை தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல IMDB தளத்தில் இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் மாஸ்டர் திரைப்படம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஆம் 19.4% பார்வையாளர்கள் இப்படத்தை காண அவளோடு இருப்பதாக தெரியவந்துள்ளது, இதோ அந்த பட்டியல்..