குறைந்த நேரத்தில் அதிக லைக்ஸ் பெற்ற பட டிரைலர்கள்- அஜித், விஜய்யின் படங்கள் டாப்பில் இருக்கிறதா?
தமிழ் சினிமா வருடத்திற்கு வருடம் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. அதேபோல் மக்களின் கவனமும் படங்களில் பல விஷயங்கள் மீது விழுகிறது.
என்ன கூறுகிறோம் என்றால் ஒரு படத்தின் கதை, இசை, நடிகர்களை தாண்டி மக்கள் இப்போது அப்படத்தின் டிரைலர், டீஸர், யூடியூப் சாதனைகளை அதிகம் கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஒரு பெரிய நடிகரின் பட டிரைலர் ஏதாவது வந்துவிட்டால் போதும் மற்ற நடிகர்களின் பட வீடியோக்களுடன் ஒப்பிடப்பட்டு அதில லைக்ஸ், பார்வையாளர்கள் பெற்ற டாப் பட விவரங்கள் வெளியாகிவிடும்.
நேற்று பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராஜமௌலியின் RRR பட டிரைலர் வெளியாகி இருந்தது, பெரிய அளவில் ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டது.
தற்போது 24 மணி நேரத்தில் அதிகம் லைக்ஸ் பெற்ற டிரைலர்களின் விவரம் வந்துள்ளது.
அதில் RRR திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது, சரி முதல் 4 படங்களின் விவரத்தை பார்ப்போம்,
- பிகில்- 1.66 M
- RRR- 1.24 M
- விஸ்வாசம்- 1.16 M
- வக்கீல் சாப்- 1.06 M