பாகுபலி இல்லை.. தமிழ் நாட்டில் அதிக அளவில் வசூல் செய்து லாபம் பெற்ற படம் எது தெரியுமா?
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் படம் என்றாலே அது கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
அதிக வசூல் செய்த படங்கள்
அதன்படி, தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( கோட்) விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடந்த 5 - ம் தேதி வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் ரூ. 36 கோடி வசூல் செய்துள்ளது.

அதற்கு பின், இந்த வரிசையில் பாகுபலி 2 இடம்பெற்றுள்ளது. எஸ்எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்த இந்த படம் தமிழ் நாட்டில் ரூ. 32 கோடி வசூல் செய்துள்ளது.
அடுத்து, சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவந்த விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து எடுக்கப்பட்ட படம் மாஸ்டர். இந்த படம் தமிழ் நாட்டில் ரூ. 18.5 கோடி வசூல் செய்துள்ளது.

இதில், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் பாகுபலி படத்தை பின்னுக்குதள்ளி, தமிழ் நாட்டில் அதிக அளவில் வசூல் செய்து லாபம் ஈட்டிய படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan