தமிழ் சினிமாவில் அதிகம் views பெற்ற ட்ரைலர்கள்! முதலிடம் இந்த நடிகருக்கு தான்

By Parthiban.A Jun 02, 2022 08:20 AM GMT
Report

சினிமா துறையில் நடிகர்கள் மத்தியில் போட்டி எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் சில நடிகர்களின் ரசிகர்கள் யார் படத்தின் ட்ரைலர் அதிகம் views, லைக்ஸ் பெறுகிறது என போட்டி போட்டுக்கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் கோலிவுட்டில் அதிகம் views பெற்று இருக்கும் படங்களில் ட்ரைலர் பற்றிய விவரம் இதோ..

பிகில் ட்ரைலர் - 57 மில்லியன்

2019ல் வெளிவந்த இந்த பிகில் ட்ரைலர் செய்த சாதனையை தற்போது வேறு எந்த படத்தின் டிரைலரும் தொடவில்லை. 57 மில்லியன் பார்வைகள் பெற்று இருக்கிறது அது.

பீஸ்ட் ட்ரைலர் - 56 மில்லியன்

விஜய்யின் லேட்டஸ்ட் படமான பீஸ்ட்டின் ட்ரைலர் தற்போது 56 மில்லியன் பார்வைகளை கடந்து இருக்கிறது. அது விரைவில் பிகில் ட்ரைலர் சாதனையை தொட்டுவிடும் என எதிர்பார்க்கலாம்.

விஸ்வாசம் - 34 மில்லியன்

அஜித் கெரியரில் பெரிய ஹிட் படங்களில் ஒன்றான விஸ்வாசம் பட ட்ரைலர் 2018 இறுதியில் ரிலீஸ் ஆனது . அது தற்போது வரை 34 மில்லியன் பார்வைகள் பெற்று இருக்கிறது.

 

வலிமை - 24 மில்லியன்

ஹெச்.வினோத் இயக்கிய வலிமை படத்தின் ட்ரைலர் 2021 டிசம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆனது . அஜித் போலீஸ் அதிகாரியாக பைக் கொள்ளையர்களை பிடிக்க முயற்சிக்கும் கதையை ட்ரைலர் தெளிவாக கட்டியிருந்தது. தற்போது வரை வலிமை ட்ரைலர் 24 மில்லியன் பார்வைகளை பெற்று இருக்கிறது.


தெறி - 18 மில்லியன்

விஜய் - அட்லீ கூட்டணியில் வந்த தெறி படத்தின் ட்ரைலர் 2016 மார்ச் 20ம் தேதி ரிலீஸ் ஆனது. விஜய் போலீஸ் அதிகாரி, கேரளாவில் மகளுடன் இருக்கும் ஜோசப் குருவில்லா ஆகிய இரண்டு கெட்டப்களில் நடித்து இருப்பார்.

தெறி ட்ரைலர் தற்போது 18 மில்லியன் பார்வைகள் பெற்று இருக்கிறது.

 

முன்னணி நடிகர்களையே முந்திய லெஜண்ட் சரவணன் ! பின்னுக்கு தள்ளப்பட்ட பிளாக் பஸ்டர் படங்கள்.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US