விஜய் டிவியில் அடுத்த பாரதி கண்ணம்மாவா! வீட்டை விட்டு வெளியேறிய சக்தி
விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் தற்போது பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
சந்தேகப்பட்ட வருண்
வில்லி சுருதி வருணிடம் சக்தி பற்றி இல்லாததை எல்லாம் சொல்லி குழப்பிவிட தற்போது பெரிய பிரச்சனை வந்திருக்கிறது.
திருமணத்திற்கு முன் வருண் மற்றும் தருண் இருவரும் காதலித்தார்கள் என ஸ்ருதி கூறிவிட தற்போது மனைவி மீது வருண் சந்தேகம் கொள்கிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய சக்தி
தம்பியை காதலித்து விட்டு அண்ணனை திருமணம் செய்துகொள்ள எப்படி மனசு வந்துச்சு என வருண் கேட்கிறார். அதன் பின் சக்தி தான் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறிவிட்டு கிளம்புகிறார். இது தற்போது ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
அவர் பையுடன் ரோட்டில் நடந்து செல்வதை பார்த்தால் பாரதி கண்ணம்மா தொடர் போல இருக்கிறது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.