விஜய்க்கு அக்காவாக நடித்துள்ள மௌனராகம் சீரியல் நடிகை.. யார் தெரியுமா
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67ல் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.
விஜய்க்கு அக்காவாக இவர் நடித்துள்ளாரா
விஜய்யின் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புலி. முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தில் விஜய் நடித்திருந்தார்.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுதோல்வியடைந்தது. இப்படத்தில் விஜய்யின் அக்காவாக மௌனராகம் சீரியல் கதாநாயகி ரவீனா நடித்திருந்தார்.
ஆனால், படத்தின் துவக்கத்திலேயே ரவீனாவை வில்லன்கள் கொன்றுவிடுவார்கள். இதோ அந்த புகைப்படம்..
அந்த படத்தில் மட்டுமின்றி விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்திலும் ஒரு சிரிய கதாபாத்திரத்தில் நடிதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.