நிச்சயதார்த்த புகைப்படத்தை ஷேர் செய்த மௌன ராகம் 2 சீரியல் ஜோடி- யாரு பாருங்க, வைரலாகும் போட்டோ
மௌன ராகம் 2
விஜய் தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கிறது, அதில் ஒரு தொடர் தான் மௌன ராகம்.
முதல் பாகத்தில் அப்பா யார் என்று தேடி அலையும் ஒரு சிறுமியின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகியது. முதல் சீசன் முடிவுக்கு வர கடந்த 2021ம் ஆண்டு 2ம் பாகமும் புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது.
2ம் பாகத்தில் ரவீனா, ஷில்பா, சல்மானுன் பாரிஸ், ராகுல் என பலர் நடித்தனர். இதில் சக்தி-வருண் மற்றும் ஸ்ருதி-தருண் ஜோடி மக்களிடம் மிகவும் பிரபலமானார்கள்.
இரண்டாம் பாகம் கடந்த வருடம் முடிவுக்கு வர அதில் நடித்தவர்கள் அனைவரும் அடுத்தடுத்த புராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நிச்சயதார்த்தம்
இந்த சீரியலில் நடித்த ஷெரின் மற்றும் சல்மான் இருவரும் எங்கேஜ்மெண்ட் என்கிற தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரீஸுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றில் சல்மான் மற்றும் ஷெரின் இருவரும் படு ரொமான்டிக்காக, மணமகன் - மணமகள் கெட்டப்பில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக நல்ல ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.