மௌனம் பேசியதே திரைப்படத்தின் வாய்ப்பை தவறவிட்ட விஜய் ! இயக்குனர் அமீர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மௌனம் பேசியதே.
அப்போதுள்ள இளைஞர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் நல்ல வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்தது.
இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி மௌனம் பேசியதே கதையை முதலில் விஜய்யிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் SAC அப்படத்தில் சில மாற்றங்களை செய்ய சொன்னதாகவும் அது தனக்கு வராது என்பதால் அதனை கைவிட்டதாக கூறியுள்ளார்.
அதன்பின் விஜய்யை சில முறை சந்தித்து கண்ணபிரான் மற்றும் சில கதைகளை கூறியதாகவும் அதுவும் விஜய்க்கு பிடித்து போனதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மௌனம் பேசியதே திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் விஜய்யும், நந்தா கதாபாத்திரத்தில் சூர்யாவையும் நடிக்கவைக்க ஆசை என அமீர் தெரிவித்துள்ளார்.