அடுத்த விவாகரத்து.. நாகினி மௌனி ராய் கணவரை பிரிந்துவிட்டாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
நாகினி சீரியல் மூலமாக ஹிந்தி மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் பெரிய அளவில் பிரபலமானவர் மௌனி ராய். குறிப்பாக அவருக்கு தமிழ்நாட்டிலும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மௌனி ராய் 2022ல் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேரளாவை சேர்ந்த மலையாளி என்பதால் திருமணம் பெங்காலி மற்றும் மலையாளி ஆகிய இரண்டு முறைப்படியும் நடந்தது.

பிரிந்துவிட்டார்களா?
திருமணம் முடிந்து தற்போது நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
மௌனி ராய் தனது கணவர் சூரஜ் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டார் என்பது தான் அது. அவரது கணவரும் மௌனி ராயை பின்தொடரவில்லை.
அதனால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இருப்பினும் அவர்கள் இருவரும் இதுவரை இது பற்றி எந்த விதமான விளக்கமும் கொடுக்கவில்லை.


சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan