மக்கள் கொண்டாடும் குடும்பஸ்தன் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
குடும்பஸ்தன்
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது குடும்பஸ்தன் திரைப்படம். மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆர்.சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் மூலம் சான்வி மேக்னா நடிகையாக அறிமுகமாகியுள்ளார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

சமீபத்தில்தான் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் இணைந்து கொண்டாடினார்கள். யார்தர்த்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதில் எமோஷன் மற்றும் நகைச்சுவையை கலந்து இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜேஸ்வர்.
மக்களின் மனதை தொட்ட இப்படம் முதல் நாளில் இருந்த வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
OTT ரிலீஸ்
இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, குடும்பஸ்தன் திரைப்படம் வரும் 28 - ம் தேதி ஜீ 5 OTT தளத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி: வெளியான இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் போட்டி அட்டவணை News Lankasri