காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ
சினிமா ரசிகர்கள் என படங்களை ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள் தற்போது பலர் உள்ளனர். எப்போது புது படங்கள் வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுவும் இது பிப்ரவரி மாதம் என்பதால் அந்த எதிர்பார்ப்பு டபுள் ஆகி இருக்கும். அந்த வகையில், தற்போது காதலர்கள் தினத்தை முன்னிட்டு வெளியாகும் படங்கள் குறித்து கீழே காணலாம்.
2கே லவ் ஸ்டோரி:
சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் வரும் 14 - ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
பேபி & பேபி:
ஜெய், சத்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்து வரும் 14 - ம் தேதி பிரதாப் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பேபி & பேபி.
படவா:
நடிகர் விமல் மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் படவா. நந்தா இயக்கத்தில் வரும் 14 - ம் தேதி இப்படம் வெளியாகிறது.
ஃபயர்:
இப்படத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை ரச்சிதா நடித்துள்ளார்.