முதல் நாள் அதிக வசூல் வேட்டை நடத்திய டாப் 5 திரைப்படங்கள்.. இதுவரை இவர் தான் நம்பர் 1
தமிழ் சினிமாவில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும்.
அதே போல், எதிர்பார்ப்புக்கு நிகர, அப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்றும் தற்போது ரசிகர்கள் கூர்ந்து கவனிக்க துவங்கிவிட்டனர்.
அதற்கு ஏற்றார் போல் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க ஒவ்வொரு படமும் அடுத்தடுத்து தொடர்ந்து ரூ. 100 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.
சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம், தமிழகத்தில் மட்டுமே ரூ. 85 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில், தமிழில் இதுவரை வெளியான படங்களில் தமிழகத்தில், முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
டாப் 5 லிஸ்ட் :
சர்கார் - ரூ.31.78 கோடி
மாஸ்டர் - ரூ.25.40 கோடி
அண்ணாத்த - ரூ.24.5 கோடி
பிகில் - ரூ.24.5 கோடி
மெர்சல் - ரூ.23.76 கோடி
இதனை வைத்து பார்க்கும் பொழுது, சர்கார் படத்தின் சாதனையை அதற்குப்பின் வந்த படங்கள் முறியடிக்க முடியாமல் இருப்பதாக தெரிகிறது.