ஜெயிலர் 2-வுடன் மோத முடிவெடுத்த ஜீவா, விஜய் ஆண்டனி
ஜெயிலர் 2
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்த படம். தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக இரண்டாம் இடத்தில் ஜெயிலர் உள்ளது.

இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 படம் இந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளது, கண்டிப்பாக இந்த படமும் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஜெயிலருடன் மோதும் படங்கள்
ஜெயிலர் 2-வுடன் வேறு எந்த படங்களும் வராது, சோலோ ரன் ஆக இருக்கும் என நினைத்த நிலையில், தற்போது இரண்டு திரைப்படங்கள் ஜெயிலருடன் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் ஜெயிலர் 2 ரிலீஸாகிய அடுத்த நாள் அக்டோபர் 16-ம் தேதி, ஜீவா நடிப்பில் 'ஜாலியா இருந்த ஒருத்தன்', விஜய் ஆண்டனியின் 'அப்பாகுட்டி' ஆகிய இரண்டு படங்கள் வரவுள்ளன; இந்த ஆயுத பூஜை விடுமுறைக்கு ரசிகர்களுக்கு செம விருந்துதான், இதில் எந்த படம் ஹிட் ஆகும் என பொறுத்திருந்து பார்ப்போம்.