விஜய் சினிமாவில் செய்ததை அப்படியே அரசியலில் செய்யணும்.. கனிமொழி அட்வைஸ்
நடிகர் விஜய் கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நேரத்தில் திடீரென அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருக்கிறார். அரசியல் கட்சியை அறிவித்து அதை பதிவும் செய்துவிட்டார்.
அவர் தனது முதல் அரசியல் மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வரும் நிலையில் அதில் பல்வேறு சிக்கல்கள் வந்துகொண்டிருக்கிறதாம். மாநாடு நடத்த இடம் கொடுக்க விடாமல் அரசியல் அழுத்தம் இருப்பதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது.
கனிமொழி அட்வைஸ்
இந்நிலையில் திமுகவை சேர்ந்த எம்பி கனிமொழி ஒரு பேட்டியில் பேசும்போது அவரிடம் விஜய்க்கு என்ன அட்வைஸ் கூறுவீர்களின் என கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், 'விஜய்யை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். அவரது குடும்பத்துடன் பழக்கம் இருக்கிறது.'
'தெளிவு மற்றும் கடின உழைப்பு இருந்ததால் தான் சினிமாவில் அவரால் இந்த இடத்திற்கு வர முடிந்தது. அதே போல அரசியலில் பயணிக்க வேண்டும் என அவருக்கு அட்வைஸ் கூறுவேன்' என கனிமொழி கூறி இருக்கிறார்.

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
