Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியின் 6 Finalist ஜோடிகள் இவர்கள் தான்.. லிஸ்ட் இதோ
விஜய் தொலைக்காட்சியில் தற்போது அனைவராலும் ரசிக்கப்படும் நிகழ்ச்சி Mr. And Mrs. சின்னத்திரை.
12 ஜோடி போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், டாப் 5 ஜோடிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஜாக் - ரோஷினி ஜோடி, முதல் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற செமி பைனல் போட்டியில் சரத் - கிருத்திகா, காயத்திரி - யுவராஜ், மைனா நந்தினி - யோகேஷ் என மூன்று ஜோடிகள் Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் இன்று நடைபெற்ற வைல்ட் கார்ட் சுற்றில் எலிமினேட் ஆன அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
இதிலிருந்து வினோத் - ஐஸ்வர்யா மற்றும் ராஜ்மோகன் - கவிதா என இரு ஜோடிகளை நடுவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்நிலையில் Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியின் பைனலிஸ்ட்டாக ஆறு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆறு ஜோடிகளின் இருந்து, யார் அந்த Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 டைட்டில் வின்னர் ஆக போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.