போட்டியாளரால் கண்கலங்கி அழுத நீயா நானா கோபிநாத்.. வெளிவந்த ப்ரோமோ வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் நல்ல TRP-யில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி Mr. And Mrs. சின்னத்திரை.
இதனுடைய மூன்றாவது சீசன் தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்பில் வெற்றிகரணமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
12 ஜோடிகளுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆனா நிலையில், தற்போது 6 ஜோடிகள் உள்ளனர்.
இந்த டாப் 6 ஜோடிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடின் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.
இந்த வாரத்தில் போட்டியாளர்கள் அனைவரும் அருமையாக சமைத்து தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, நடுவர்களிடம் இருந்து மதிப்பெண்களை பெறவேண்டும்.
இதில், KPY வினோத் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி சமைத்த உணவை சாப்பிட நடுவர் கோபிநாத் மற்றும் நடுவர் தேவதர்ஷினி இருவரும் உணவில் இருந்த காரத்தினால் கண்கலங்கினார்கள்.
இந்த நகைச்சுவையான ப்ரோமோ தற்போது Mr. And Mrs. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..