Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 டைட்டில் வின்னர் இவர்கள் தான்.. பல லட்சத்தை தட்டிதூக்கிய ஜோடி
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி Mr. And Mrs. சின்னத்திரை.
12 ஜோடி போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், டாப் 5 ஜோடிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஜாக் - ரோஷினி ஜோடி, முதல் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற செமி பைனல் போட்டியில் சரத் - கிருத்திகா, காயத்திரி - யுவராஜ், மைனா நந்தினி - யோகேஷ் என மூன்று ஜோடிகள் Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன்பின் வைல்ட் கார்ட் போட்டியில் வினோத் - ஐஸ்வர்யா மற்றும் ராஜ்மோகன் - கவிதாவுடன் சேர்த்து மொத்தம் 6 ஜோடிகளை பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுத்தனர்.
இந்நிலையில் இந்த வாரம் நடந்துள்ள Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 பைனல் போட்டியில் சரத் - கிருத்திகா ஜோடி டைட்டில் வின்னர் ஆகியுள்ளனர்.
இந்த டைட்டில் வின்னர் ஜோடிக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.