Mr & Mrs சின்னத்திரை 4வது சீசன் போட்டியாளர்கள் இவர்களா?- வெளிவந்த விவரம்
Mr & Mrs சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ஹிட் நிகழ்ச்சி.
மக்களிடம் நன்கு பிரபலமான பிரபலம் தனது நிஜ துணையுடன் இந்நிகழ்ச்சி கலந்துகொண்டு போட்டியிடுவதே நிகழ்ச்சியின் கரு. முதலில் ஜாலியாக எப்படி நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதோ அப்படியே தான் இறுதி வரை இருக்கும்.
இதுவரை 3 சீசன்கள் முடிந்துவிட்டது, விரைவில் 4வது சீசன் தொடங்க இருக்கிறது.
போட்டியாளர்கள்
இந்த 4வது சீசன் முதல் நிகழ்ச்சி அண்மையில் தான் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதில் யார் யார் போட்டியிட போகிறார்கள் என்ற விவரம் வந்துள்ளது.
ஆனால் இது நிஜ தகவலா என்பது சரியாக தெரியவில்லை.
தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் ரேகா, சீரியல் நடிகை பரீனா, நடிகை துர்கா, நடிகர் யோகி மற்றும் சூப்பர் சிங்கர் சிங்கப்பூர் திலீபன் ஆகியோர் தங்களது துணையுடன் இதில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.