தனது காதலியை மணந்தார் Mr Manaivi சீரியல் நடிகர்- குவிந்த சன் டிவி பிரபலங்கள், போட்டோ இதோ
மிஸ்டர் மனைவி
சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் குருவி தமிழ்ச்செல்வன்.
இவர் முதன்முதலில் அபியும் நானும் சீரியலில் குருவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததால் இவரை ரசிகர்கள் குருவி தமிழ்செல்வன் என்றே அழைத்து வருகிறார்கள்.
அபியும் நானும்' சீரியலை தொடர்ந்து, தமிழ்ச்செல்வன் தற்போது 'மிஸ்டர் மனைவி', 'புதுவசந்தம்' போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
திருமணம்
நடிப்பில் பிஸியாக இருக்கும் இவர் தனது காதலி பூர்ணிமா என்பவரை நவம்பர் 28ம் தேதி சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.
இவரது திருமணத்தில் சன் டிவி சீரியல் திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். தமிழ் செல்வனும் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.