Mr X திரை விமர்சனம்

Report

Mr X திரை விமர்சனம்

இயக்குனர் மது ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஒரு ஸ்பை திரில்லராக வந்துள்ள இந்த Mr X படம் எப்படியுள்ளது? பார்ப்போம்.

Mr X திரை விமர்சனம் | Mr X Movie Review

கதைக்களம்

இந்தியா, அமெரிக்கா சேர்ந்து நந்தாதேவி என்ற இடத்தில் ஒரு நியூக்ளியர் டெஸ்ட் செய்ய போக, அங்கு நடந்த பனிச்சரிவில் அந்த நியூக்ளியர் டிவைஸ் அங்கேயே தொலைகிறது. இதை பல வருடம் கழித்து ரஷ்யா கண்டுப்பிடிக்க, அவர்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகின்றனர்.

அந்த நேரத்தில் இந்தியாவின் முன்னணி ரா ஏஜண்ட் சரத்குமார் அவர்களை கொன்று டிவைஸை கைப்பற்ற ஆனால், எப்படியோ ரஷ்யாவிடம் சிக்கி கொள்கிறார்.

Mr X திரை விமர்சனம் | Mr X Movie Review

இவரை காப்பாற்ற ரஷ்யாவில் லோக்கலில் இருக்கும் இந்தியன் ஏஜண்ட் கௌதம் கார்த்திக்கை அனுப்ப, அந்த மிஷன் எதிர்பாராத டுவிஸ்ட் ஒன்றுடன் பெயிலியர் ஆகிறது.

இதனால் இந்தியாவில் சென்னையில் இருக்கும் ரா ஏஜண்ட் ஆர்யா மற்றும் அவரின் டீம்-ற்கு ரஷ்யா சென்று சரத்குமார் மற்றும் அந்த நியூக்ளியர் டிவைஸை கைப்பற்ற ஆர்டர் வர, அதன் பின் நடந்த பல திருப்பங்கள் மற்றும் இந்த மிஷனை வெற்றிகரமாக ஆர்யா முடித்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆர்யா கண்டிப்பாக இவர் தான் ரா ஏஜண்ட் என சொல்லும்படி ஆறடி உயரம், முதல் காட்சியில் தண்ணீரில் இருந்து எழுந்து வரும் போதே மிரள வைக்கிறார். அதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்புகிறார்.

கௌதம் கார்த்திக் இதுவரை தன் திரைப்பயணத்தில் செய்யாத கதாபாத்திரம், அவரும் பெரிய அலட்டல் இல்லாமல் நீட் ஆக செய்துள்ளார், இவர்களுடன் சரத்குமார், ரைஸா வில்சன், அதுல்யா, அனேகா, மஞ்சு வாரியர், சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் மஞ்சு வாரியர் ரப் ஆன ஏஜண்ட் குரூப் லீடராக மனதில் நிற்கிறார், அதிலும் கிளைமேக்ஸ் அவர் செய்யும் விஷயங்கள் கவர்கிறது.

Mr X திரை விமர்சனம் | Mr X Movie Review

ஒரு ரா ஏஜண்ட் ஸ்பை திரில்லர் படம் என்றாலே சண்டை காட்சிகள் மற்றும் டெக்னாலஜி, எட் ஆப் தி சீட் சேஸிங் தான் நமக்கு முதலில் வரும், அதை முடிந்த அளவிற்கு நன்றாக கொடுக்க மனு ஆனந்த் முயற்சி செய்துள்ளார்.

ஆனால், என்ன நாமே ஹாலிவுட், பாலிவுட் என பல ஆகஷன் ஸ்பை திரில்லரை பார்த்ததால், இந்த படத்தில் வரும் காட்சிகள், டுவிஸ்ட் எல்லாம் எந்த ஒரு ஹைப்-ம் நமக்கு கொடுக்கவில்லை, திரைக்கதையில் முடிந்த அளவிற்கு டுவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ் கொடுக்க முயற்சித்துள்ளனர், ஆனால், அது எல்லாமே நமக்கு பல இடங்களில் தெரியும் படியே உள்ளது.

Mr X திரை விமர்சனம் | Mr X Movie Review

நியூக்ளியர் டிவைஸ், அதை துரத்தும் மாற்ற நாடுகள், அந்த நேரத்தில் ஜி-20 மாநாடு, எந்த அசம்பாவிதம் இல்லாமல் நாட்டை காப்பாற்ற வேண்டும் போன்ற பல ஐடியாக்கள் நன்றாக இருந்தாலும், அது காட்சிகளாக நாம் எல்லாரும் பல படங்களில் பார்த்தது தான் கொஞ்சம் பலவீனமாகிவிட்டது.

டெக்னிக்கல் ஆக படம் வலுவாகவே உள்ளது, ஒளிப்பதிவு, இசை அனைத்தும் நன்றாகவே உள்ளது.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம் நடிகர்கள் பங்களிப்பு இடைவேளை, கிளைமேக்ஸ் காட்சிகள்

பல்ப்ஸ்

சுவாரஸ்யமில்லாத திரைக்கதை.

மொத்தத்தில் Mr X ஐடியாவாக அருமை என்றாலும், அது காட்சிகளாக சுவாரஸ்யமில்லாமல் போய்விட்டது.

2.5/5 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US