திரையில் தற்போது தோன்றாதது ஏன்.. மனம் திறந்த நடிகை மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி நட்சத்திரமாக மாறியவர் நடிகை மிருணாள் தாகூர். மராத்தி மொழியில் திரைப்படங்கள் நடிக்க துவங்கிய இவர், பின் ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார்.
ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த படம் என்றால் அது சீதா ராமம். கடந்த 2022ல் வெளிவந்த சீதா ராமம் படத்தில், மிருணாள் தாகூர் ஏற்று நடித்த நூர்ஜகான் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.
இதன்பின், நானியுடன் இணைந்து Hi nana படத்தில் நடித்தார். இப்படமும் மிருணாள் தாகூருக்கு வெற்றியை தேடி தந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'பேமிலி ஸ்டார்' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை.
தோன்றாதது ஏன்
இவர் நடிப்பில் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் மிருணாள் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், "ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை விரும்புகிறார்கள். அதனால் நான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறேன். முழுவதுமாக ஒரு படத்தில் கவனம் செலுத்தாமல் பல படங்களில் கையெலுத்திடுபவள் நான் இல்லை. அதனால் நல்ல கதாபாத்திரத்திற்காக காத்து கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
