வித்தியாசமான உடையில் கேன்ஸ் 2023ல் நடிகை மிருனாள் தாகூர்.. சீதா ராமம் பட நடிகையா என ஷாக்கான ரசிகர்கள்
மிருணாள் தாகூர்
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் கதாநாயகி சீதா ரோலில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஆவார்.முதலில் சின்னத்திரையில் நடித்து வந்த நடிகை மிருணாள் தற்போது சீதா ராமம் படத்தின் மூலம் முன்னணி நடிகை எனும் அந்தஸ்திற்கு பக்கத்தில் வந்துவிட்டார்.

அந்த அளவிற்கு இப்படம் மிருணாள் தாகூருக்கு நல்ல ரீச் கொடுத்துள்ளது.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் கூட மிருணாள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.
வருடா வருடம் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் நிகழ்வு தான் கேன்ஸ் திரைப்பட விழா. இந்த விழாவிற்கு இந்திய திரையுலகில் இருந்து முக்கிய நட்சத்திரங்கள் சென்றுள்ளனர். அதில் ஒருவராக நடிகை மிருணாள் தாகூரும் சென்றுள்ளார்.
கேன்ஸ் 2023
இந்த விழாவிற்காக நடிகை மிருனாள் தாகூர் அணிந்து சென்ற உடை தற்போது வைரலாகி வருகிறது. வித்தியாசமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடையை அணிந்திருக்கும் மிருணாள் அப்போது எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மிருணாள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இன்னும் சிலர் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு, சீதா ராமம் படத்தில் நடித்த நடிகையா இது என்று கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..






