அன்று உறவினர்கள் செய்த அவமானம்.. இன்று ரஜினிகாந்த் ஸ்டைலில் மாஸ் காட்டிய நடிகை மிருணாள் தாகூர்! என்ன விஷயம் தெரியுமா?
மிருணாள் தாகூர்
இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். இவர் நடித்த சீதா ராமம் படம் மாபெரும் ஹிட் ஆனதை தொடர்ந்து, இவருக்கென்றே தனி மார்க்கெட் திரையுலகில் உருவாகிவிட்டது.

டோலிவுட் முதல் பாலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்தன. சில தமிழ் படத்தில் நடிப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் தற்போது இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
வாழ்க்கையில் உச்சத்திற்கு செல்லும் அனைவரும் தங்களது வாழ்க்கையில் கண்டிப்பாக அவமானங்களை சந்தித்திருப்பார்கள். அது குடும்பத்தினர் மூலமாகவோ, வேலை செய்யும் இடத்திலோ, அல்லது பொது இடங்களிலோ நடந்திருக்கும்.

நிலாவை கடுப்பேற்ற வேறொரு பெண்ணை காதலித்த சோழன்.. ஆனால், காத்திருந்த அதிர்ச்சி! அய்யனார் துணை சீரியல் புரோமோ
உறவினர்கள் செய்த அவமானம்
அப்படி நடிகை மிருணாள் தாகூர் தனது உறவினர்களால் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, "என் உறவினர்கள் காரில் எங்க அம்மாவை ஏற்ற மறுத்தார்கள். அன்று நான் முடிவு செய்தேன், சொந்தமாக கார் வாங்க வேண்டுமென்று. இன்று நான் பென்ஸ் கார் வாங்கி இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் பெண் கார் வைத்துள்ளது நாங்கள் மட்டும்தான்" என்று கூறியுள்ளார். தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன கார் கதை போலவே, மிருணாள் தாகூர் பகிர்ந்த இந்த விஷயமும் செம மாஸாக உள்ளது என பலரும் கூறி வருகிறார்கள்.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri