ஜிம்மில் மிருணாள் தாகூருக்கு விழுந்த அடி.. வைரலாகும் வீடியோ!!

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
மிருணாள் தாகூர்
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில், மிருணாள் தாகூர் இணைந்துவிட்டார்.
பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் நானியின் ஹாய் நானா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தனர். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ஸ்டார் பேமிலி திரைப்படம் ட்ரோல்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
வீடியோ
நடிகைகள் ஜிம்மில் வொர்க்கவுட் செய்வதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை மிருணாள் தாகூர், வொர்க்கவுட் செய்யாமல் ஜிம் மாஸ்டருக்கு ஹார்ட்டீன் வைக்க முயன்றார். அப்போது ஜிம் மாஸ்டர் அவரது கையில் அடித்து டம்பள்ஸை கையில் கொடுத்து வொர்க்கவுட் செய்ய சொன்னார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ வீடியோ..