பெற்றோர் எதிர்ப்பு.. முத்த காட்சியில் நடிக்க பயந்த மிருனாள் தாகூர்! ஆனால்..
சீதா ராமம் படம் மூலமாக பாப்புலர் ஆனவர் மிருனாள் தாகூர். சமீபத்தில் அவர் விஜய் தேவரகொண்டா உடன் The Family Star என்ற படத்தில் நடித்து இருந்தார்.
சில படங்களில் ஹோம்லியாக நடிக்கும் அவர், படத்திற்கு தேவை என்றால் கிளாமராகவும் நடித்து வருகிறார். தான் நடிக்க வந்த புதிதில் முத்த காட்சியில் நடிக்க பயமாக இருந்ததாகவும், அதனால் பல்வேறு பட வாய்ப்புகள் இழந்ததாகவும் அவர் கூறி இருக்கிறார்.
பெற்றோருக்கு புரிய வைத்தேன்
அவரது பெற்றோரும் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். அதன் பின் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் எல்லாம் இழந்து வந்ததால், அதிரடியாக ஒரு முடிவெடுத்தாராம் அவர்.
பெற்றோரை அழைத்து பேசினாராம். "எனக்கு அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க பயம் தான், ஆனால் இந்த துறைக்கு இது தேவை, இது என் சாய்ஸ் இல்லை" என கூறினாராம் அவர்.
அதற்கு பிறகு தான் படத்தில் மிருனாள் தாகூர் எந்த மாதரி காட்சியிலும் நடிக்க ஓகே சொல்லி வருகிறாராம்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
