சீரியல் நடிகை, இப்போது ஒரு படத்திற்கு பல கோடி சம்பளம் வாங்கும் டாப் நாயகி.. யார் தெரியுமா?
சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பின் சினிமாவில் நுழைந்து படங்கள் நடித்து, தற்போது பாப்புலர் நடிகையாக அதிக சம்பளம் பெற்று வரும் நாயகி ஒருவர் குறித்து உங்களுக்கு தெரியுமா?.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் இவர்.
யார் தெரியுமா?
அவர் வேறுயாருமில்லை, நடிகை மிருணாள் தாகூர் தான். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.
தற்போது இவர் கையில் 5க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. மிருணாளின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 40 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 2 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
