அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறேனா? மிருனாள் தாகூர் பதிலால் ரசிகர்கள் ஷாக்
இயக்குனர் அட்லீ தற்போது மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை AA22xA6 என தற்காலிகமாக அழைத்து வருகின்றனர்.
ஹாலிவுட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக பிரம்மாண்டமாக படத்தை எடுத்து வருகிறார் அட்லீ. அல்லு அர்ஜுன் உடன் தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மிருனாள் தாகூர்
அட்லீ படத்தில் மிருனாள் தாகூர் ஒரு ரோலில் நடிப்பதாக ஆரம்பத்தில் இருந்தே செய்தி பரவி வருகிறது. தற்போது ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அவரிடம் அல்லு அர்ஜுன் படம் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அதற்கு அவர் கொடுத்த பதில் தான் எல்லோருக்கும் ஷாக்.
"உண்மையாகவா, நான் நடிக்கிறேனா. அது நடக்கணும் என வேண்டிக்கொள்ளுங்கள். அது நடந்தால் எல்லோரும் கொண்டாடலாம்" என மிருனாள் பதில் அளித்தார்.
அந்த செய்தி முற்றிலும் வதந்தி என்பது அவர் பதிலால் தெளிவாகி இருக்கிறது.

ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
விசிகவில் அதிரடி நடவடிக்கை: சங்கத்தமிழன் 3 மாதங்கள் நீக்கம்! விளக்கம் அளித்த திருமாவளவன் IBC Tamilnadu