தனுஷ் உடன் திருமணமா? மிருனாள் தாகூர் கோபமாக கொடுத்த பதில்
தனுஷ் மற்றும் நடிகை மிருனாள் தாகூர் ஆகியோர் காதலித்து வருவதாக கடந்த வருடத்தில் இருந்தே கிசுகிசு பரவி வருகிறது. அது உண்மை இல்லை என நடிகை சொன்ன பிறகும் கிசுகிசு தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது.
பிப்ரவரி 14ம் தேதி தனுஷ் மற்றும் மிருனாள் தாகூர் திருமணம் செய்ய போகிறார்கள் என புதிதாக ஒரு செய்தி சமீபத்தில் பரவியது.

கோபமான பதில்
இது பற்றி மிருனாள் தாகூரிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர் கோபமாக பதில் சொல்லி இருக்கிறார். "முதல் முறையாக பிப்ரவரி 14 என்பது ஏப்ரல் 1, April fools day ஆக மாறி இருக்கிறது. ஏனென்றால், இதை யார் பரப்ப தொடங்கினார்கள் என எனக்கு தெரியல."
"நான் பேசியதாக செய்தி போடுகிறார்கள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை" என மிருனாள் தெரிவித்து இருக்கிறார்.
