பல கோடி சம்பளம் ஆனால் அனுபவிக்க மனமில்லாத மிருணாள் தாகூர்.. காரணம் என்ன?
மிருணாள் தாகூர்
சின்னத்திரையில் சீரியல் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பின் சினிமாவில் நுழைந்து படங்கள் நடித்து, தற்போது பாப்புலர் நடிகையாக அதிக சம்பளம் பெற்று வரும் நாயகி தான் மிருணாள் தாகூர்.
பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
காரணம் என்ன?
இந்நிலையில், பல கோடி வைத்திருக்கும் மிருணாள் ஆடை குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவதில் எனக்கு விருப்பமில்லை, எத்தனை விலை கொடுத்து ஆடைகள் வாங்கினாலும், அவை பெரும்பாலும் அலமாரியிலேயே முடங்கிக் கிடக்கின்றன.
நான் வாங்கியதிலேயே அதிக விலை கொண்ட ஆடை ரூ. 2 ஆயிரம் மட்டுமே. திரைப்பட விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருவேன்.
ஆனால் அவை அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டவை, விலை உயர்ந்த ஆடைகளை வாங்க எனக்கு விருப்பமில்லை" என்று அவர் கூறியது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.