ஜெய்ஸ்வாலுடன் காதலா? நடிகை மிருணாள் தாகூர் விளக்கம்

By Karthick Raja Aug 09, 2026 05:51 AM GMT
Report

நடிகை மிருணாள் தாகூர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலை காதலிக்கிறாரா என பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ப்ரோமோஷனுக்கு வராதது இதனால் தான்.. டாக்சிக் பட விழாவில் பேசிய நயன்தாரா

ப்ரோமோஷனுக்கு வராதது இதனால் தான்.. டாக்சிக் பட விழாவில் பேசிய நயன்தாரா

மிருணாள் தாகூர்

பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் நடிகை மிருணாள் தாகூர் குறித்து தொடர்ந்து பல விதமான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன், பிரபல நடிகர் தனுஷை மிருணாள் தாகூர் காதலிக்கிறார் என கூறப்பட்டது. இது தொடர்பாக பல செய்திகள் ஊடகங்கள் மத்தியில் வெளிவந்தன. பின் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஜெய்ஸ்வாலுடன் காதலா? நடிகை மிருணாள் தாகூர் விளக்கம் | Mrunal Thakur Put A End To Online Dating Rumors

யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் - மிருணாள் தாகூர்

இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூரும் இந்திய கிரிக்கெட் வீரரான யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலும் மும்பை பாந்தரா வெஸ்ட் பகுதியில் உள்ள கஃபேவில் இருந்து வெளியேறிதாக கூறப்படும் வீடியோ சமீபத்தில் வைரலானது. இதையடுத்து இருவரும் காதலித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்தது.

ஜெய்ஸ்வாலுடன் காதலா? நடிகை மிருணாள் தாகூர் விளக்கம் | Mrunal Thakur Put A End To Online Dating Rumors

விளக்கம் கொடுத்த மிருணாள்

இந்நிலையில், வைரலான வீடியோ தொடர்பான பதிவில், கமெண்ட் பகுதியில் மிருணாள் தாகூர் தனது விளக்கம் கொடுத்துள்ளார். இதில், "ப்ரோ, கொஞ்சம் ரிலாக்ஸ். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் இடத்தை காட்டுங்கள். எப்படி இப்படியெல்லாம்? படித்தவர்களாக இருக்கும் நீங்களே இப்படி வதந்திகளை உண்மை என நம்புகிறீர்களே? நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஜென்-Z-விடம் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். சரியான பிரச்சனைகள் குறித்து வீடியோக்களை உருவாக்கினால் அதிகமான பார்வைகள் கிடைக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

ஜெய்ஸ்வாலுடன் காதலா? நடிகை மிருணாள் தாகூர் விளக்கம் | Mrunal Thakur Put A End To Online Dating Rumors

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

நடிகை மிருணாள் தாகூரின் இந்த பதிவால், யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலை அவர் காதலித்து வருகிறார் என சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜெய்ஸ்வாலுடன் காதலா? நடிகை மிருணாள் தாகூர் விளக்கம் | Mrunal Thakur Put A End To Online Dating Rumors

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US