தனுஷ் காதல் கிசுகிசு பற்றி மிருனாள் தாகூர் கொடுத்த ரியாக்ஷன்! வைரல் பதிவு
நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் தேரே இஷ்க் மே என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன நிலையில் 50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க தனுஷ் பதிவில் பிரபல நடிகை மிருனாள் தாகூர் எதாவது கமெண்ட் செய்து வாழ்த்து தெரிவித்தால் கூட உடனே அவர்களை பற்றி காதல் கிசுகிசுக்கள் வருகிறது.
இதற்கு முன்பே தனுஷ் - மிருனாள் ஆகியோர் பற்றி காதல் கிசுகிசு வேகமாக பரவிய நிலையில் அது உண்மை இல்லை என மிருனாள் விளக்கம் கொடுத்து இருந்தார்.

நடிகை பதிலடி
மேலும் கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் உடன் இணைத்தும் மிருனாள் தாகூர் பற்றி காதல் கிசுகிசு தற்போது வர தொடங்கி இருக்கிறது.
தன்னை பற்றி வரும் கிசுகிசுக்களுக்கு நடிகை மிருனாள் தாகூர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். "வதந்திகள் எல்லாம் இலவசமான PR (விளம்பரம்) அது எனக்கு பிடிக்கும். அவர்கள் பேசுகிறார்கள், நாங்கள் சிரிக்கிறோம்" என சிரிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri