அறியாத வயசு.. அப்படி பண்ணிட்டேன்! மன்னிப்பு கேட்ட மிருனாள் தாகூர்
நடிகை மிருனாள் தாகூர் சமீபத்தில் தனுஷ் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் தனுஷ் உடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இப்படி ஒரு செய்தி பரவியது.
இருப்பினும் நாங்கள் நண்பர்கள் மட்டும் தான். அந்த நிகழ்ச்சி நான் தனுஷை அழைக்கவில்லை என மிருனாள் விளக்கம் கொடுத்த்தார்.
இதுஒருபுறம் இருக்க மிருனாள் தாகூர் பல வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆனது. அதில் அவர் நடிகை பிபாஷா பாசு ஆண் போல இருக்கிறார் என பாடி ஷேமிங் செய்வது போல பேசி இருக்கிறார்.
அதற்கு பிபாஷாவும் தற்போது கோபமாக இன்ஸ்டாவில் பேசி இருந்தார்.
மன்னிப்பு கேட்ட மிருனாள்
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி மிருனாள் தாகூர் இன்ஸ்டாவில் விளக்கம் கொடுத்து பதிவிட்டு இருக்கிறார்.
"19 வயதில் டீனேஜ் பெண்ணாக சில முட்டாள்தனமான விஷயங்களை பேசி இருக்கிறேன். நான் பேசிய வார்த்தைகள் எந்தளவுக்கு காயப்படுத்தும் என்பதை நான் அப்போது புரிந்திருக்கவில்லை."
"அதற்காக நான் ஆழமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் பாடி ஷேமிங் செய்ய வேண்டும் என்பது என் எண்ணமில்லை. விளையாட்டாக அந்த பெட்டியில் பேசியது இந்த அளவுக்கு சென்று இருக்கிறது. நான் என் வார்த்தைகளை வேறு விதமாக பயன்படுத்தி இருக்க வேண்டும்."
"அழகு எல்லா விதமாக இருக்கும், கால்போகும் நான் இதை புரிந்துக்கொண்டிருருக்கிறேன்" என மிருனாள் பதிவிட்டு இருக்கிறார்.


பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
