10 கோடி செலவிட்டாலும் இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது - நடிகை மிருணாள் தாகூர்

By Kathick Feb 17, 2026 05:30 AM GMT
Report

மிருணாள் தாகூர்

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். இவர் நடித்த சீதா ராமம் படம் மாபெரும் ஹிட் ஆனதை தொடர்ந்து, இவருக்கென்றே தனி மார்க்கெட் திரையுலகில் உருவாகிவிட்டது.

10 கோடி செலவிட்டாலும் இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது - நடிகை மிருணாள் தாகூர் | Mrunal Thakur Talk About Free Publicity

டோலிவுட் முதல் பாலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்தன. சில தமிழ் படங்களில் நடிப்பதாகவும் பேச்சுகள் எழுந்தன. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் தற்போது இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

10 கோடி செலவிட்டாலும் இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது - நடிகை மிருணாள் தாகூர் | Mrunal Thakur Talk About Free Publicity

இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது

நடிகை மிருணாள் தாகூர் நடிகர் தனுஷை திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமீபத்தில் வதந்திகள் பரவின. இது பரபரப்பை கிளப்பிய நிலையில் பேசுபொருளாக மாறியது. ஆனால், அது முற்றிலும் தவறான ஒன்று என மிருணாள் மறுப்பு தெரிவித்தார்.

10 கோடி செலவிட்டாலும் இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது - நடிகை மிருணாள் தாகூர் | Mrunal Thakur Talk About Free Publicity

மேலும், இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர் "10 கோடி ரூபாய் நான் செலவு செய்திருந்தாலும் கூட இந்த அளவிற்கு எனக்கு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது" என கூறியுள்ளார். வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US