காதல் என்றால் நடிகை மிருணாள் தாகூருக்கு இவ்வளவு பயமா! என்ன கூறியுள்ளார் பாருங்க
மிருணாள் தாகூர்
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். இவர் நடிகர் தனுஷை காதலிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை நடிகர் தனுஷும் நானும் நல்ல நண்பர்கள் என மிருணாள் தாகூர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், காதலில் தனக்கு இருக்கும் பயம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை மிருணாள் தாகூர்.
இவ்வளவு பயமா
காதலில் தனக்கு மிகவும் பயம், துரோகம் செய்யப்படுமோ என்பதுதான் என்று கூறியுள்ள மிருணாள் தாகூர், தனக்கு முன்பு இருந்த அதே அன்பு இப்போது இல்லை என தனது துணை கூறினால் ஏற்றுக்கொள்வேன் என்றும், ஆனால் துரோகம் செய்யப்படுமோ என்கிற பயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உண்மையான காதல்தான் தனக்கு முக்கியம் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி கால நண்பர்களுடன் இன்னும் தொடர்பில் இருப்பதாக மிருணாள் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், எல்லாம் சரியானவர் என்று நினைக்கும் ஒருவருடன் வாழ விரும்பவில்லை என்றும் காதல் தோல்வியை சந்தித்தாலும், அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டவதாகவும் அவர் கூறியுள்ளார்.