ஜிம்மில் இருந்து தப்பி ஓடும் நடிகை மிருணாள் தாகூர்.. வைரலாகும் வீடியோ, இதோ!
மிருணாள் தாகூர்
தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த Hi நானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் திரையுலகில் தான் நடிகை மிருணாள் தாகூருக்கு அதிக பட வாய்ப்புகள் வருகிறது.
படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் மிருணாள் தாகூர் அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமா பக்கம் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், மிருணாள் தாகூர் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த போது, பயிற்சியாளரிடம் இருந்து தப்பித்து ஓடுவது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த ஜாலியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,