உலகில் தலைசிறந்த நம்பர் 1 ஹாலிவுட் படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர் எம்.எஸ் பாஸ்கர்.. எந்த படம் தெரியுமா

ms basker the shawshank redemption morgan freeman
By Kathick Sep 22, 2021 06:10 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.

இதன்பின், பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

எம்.எஸ். பாஸ்கரை ஒரு நடிகராக மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால், நடிகர் ஆவதற்கு முன்பே, அவர் ஒரு சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட்.

ஆம், 1991ஆம் ஆண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்டாக தனது பயணத்தை துவங்கிய இவர், அசுரன் வரை பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

அதே போல், IMDB ரேட்டிங்கில் உலககிலேயே நம்பர் 1 இடத்தில் இருக்கும், 'தி ஷாவ்ஷாங்க் ரெடிம்சன்' எனும் ஹாலிவுட் படத்திலும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் டப்பிங் பேசியுள்ளார்.

ஆம், அப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டபோது, அப்படத்தில் Ellis Boyd கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மார்கன் பிரீமனுக்கு, நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தான் தமிழில் டப்பிங் பேசியுள்ளார்.

உலகில் தலைசிறந்த நம்பர் 1 ஹாலிவுட் படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர் எம்.எஸ் பாஸ்கர்.. எந்த படம் தெரியுமா | Ms Basker Dubbed No 1 Movie In The World

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US