மகன் மடியில் தனது உயிரைவிட்ட மயில்சாமி- கடைசி நிமிடங்கள் குறித்து கூறிய எம்.எஸ்.பாஸ்கர்
மயில்சாமி
நடிகர் என்பதை தாண்டி நல்ல மனமுடைய ஒருவர். இதுநாள் வரை நடிகராக மட்டுமே தெரிந்த மயில்சாமி இப்போது தெய்வமாக தெரிகிறார், இறந்துவிட்டார் என்பதால் அல்ல அவர் செய்த நல்ல விஷயங்களால் மக்களுக்கு அப்படி தோன்றுகிறது.
உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு தனது நகை எல்லாம் அடமானம் வைத்து எல்லாம் உதவி செய்திருக்கிறார்.
கடவுள் நம்பிக்கை, மற்றவர்களுக்கு உதவுவது, எல்லோரிடமும் சகஜமாக பழகுவது என சிறப்பாக வாழ்ந்துள்ளார் மயில்சாமி.

கடைசி நிமிடங்கள்
மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அனைவருமே வருத்தத்தில் இருக்க அவரது நெருங்கிய நண்பரான எம்.எஸ்.பாஸ்கர் கடும் துக்கத்தில் உள்ளார்.
ஒரு பேட்டியில் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், 3.30 மணிக்கு சிவராத்திரி பூஜை முடிந்து வீட்டிற்கு வந்திருக்கான், அப்போது பசிக்குது என கூற டிபன் கொடுத்துள்ளார்கள்.
பின் சாப்பிட்டது நெஞ்சுக்குள்ளேயே நிக்குது என கூற வெந்நீர் கொடுத்துள்ளார்கள். அதன்பிறகு நெஞ்சு வலிக்குழு என சொன்னதும் பசங்க காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
அப்போது தெரு முனை திரும்புவதற்குள் மகன் மடியிலேயே விழுந்து இறந்திருக்கிறான் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri