முஃபாஸா: தி லயன் கிங் படத்தின் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
முஃபாஸா: தி லயன் கிங்
உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதைகளில் ஒன்று தி லயன் கிங். கடந்த 2019ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்த இப்படம் வெற்றியடைந்தது. தமிழ் நடிகர்கள் இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
வசூல் விவரம்
இக்கதையின் தொடர்ச்சியாக முஃபாஸா: தி லயன் கிங் கடந்த ஆண்டு வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் உலகளவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் வசூல் வேட்டையாடியது.
ஆம், இந்தியாவில் ரூ. 160 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 23 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
