தமிழகத்தில் மாபெரும் வெற்றியடைந்த முஃபாசா: தி லயன் கிங்.. வசூல் எவ்வளவு தெரியுமா
முஃபாசா: தி லயன் கிங்
மக்களின் மனதை கவர்ந்த அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று முஃபாசா: தி லயன் கிங். குறிப்பாக குழந்தைகளின் கவனத்தை அதிகம் ஈர்த்த கதையாகவும் லயன் கிங் உள்ளது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் முன்னணி நட்சத்திரங்களால் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட்டடப்பட்டது.
முஃபாசா கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்திருந்தார். மேலும் அசோக் செல்வன், நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தனர்.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் முஃபாசா: தி லயன் கிங் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 19 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.