டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம்
நடிகை முமைத் கானை தெரியதவர்கள் இருக்க முடியாது. போக்கிரி படத்தில் வரும் "என் செல்ல பேரு ஆப்பிள்" பாடல் தொடங்கி கந்தசாமி படத்தில் வரும் 'என் பேரு மீனாகுமாரி' வரை அவர் ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பிரபலமாக இருந்த அவர் திடீரென சினிமா துறையில் இருந்து காணாமல் போனார்.

விபத்து.. கோமா
30 வயதில் விபத்தில் சிக்கிய அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு கோமாவுக்கு சென்றுவிட்டாராம். 15 நாட்கள் கோமாவில் இருந்த அவர் அதன் பின் சுயநினைவுக்கு வந்தாலும் அவர் மூளையில் 5 நரம்புகள் வெடித்ததனால் அவர் 7 வருடங்களுக்கு எந்த வேலையும் செய்ய கூடாது என மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.
சின்ன வெயிட் கூட தூக்க கூடாது, வலிப்புக்காக 7 வருடங்களாக மருந்துகள் சாப்பிட்டு வந்திருக்கிறேன் என அவர் கலக்கத்துடன் பேட்டி கொடுத்து இருக்கிறார்.
சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய அவர் தற்போது ஹைதராபாத்தில் மேக்அப் மற்றும் ஹேர் ட்ரெஸ்ஸிங் பயிற்சி இன்ஸ்டிடுயூட் ஒன்றை அவர் தொடங்கி நடத்தி வருகிறாராம்.

விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மெர்சல் பிரச்சனை: விஜய்- எடப்பாடி சந்திப்பு- இரவோடு இரவாக தீர்வு: அமைச்சர் சொன்ன தகவல் IBC Tamilnadu