மார்க் ஆண்டனி சென்சார் செய்ய 6 லட்சம் ரூபாய் லஞ்சம்.. விஷால் அதிர்ச்சி குற்றச்சாட்டு
விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன மார்க் ஆண்டனி படம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று நல்ல வசூலும் குவித்து வருகிறது.
இன்று ஹிந்தியில் மார்க் ஆண்டனி இன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் ஹிந்தியில் படத்தை சென்சார் செய்ய மும்பையில் இருக்கும் CBFC அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தான் அனுமதி அளித்ததாக விஷால் கூறி இருக்கிறார்.
6 லட்சம் லஞ்சம்
படத்தை சென்சார் போர்டுக்கு ஸ்கிரீனிங் செய்வதற்க்கு 3 லட்சம் லஞ்சம் மற்றும் சர்டிபிகேட் வழங்க 3.5 லட்சம் லஞ்சமாக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் வாங்கியதாக விஷால் தெரிவித்து உள்ளார்.
இந்த குற்றச்சாட்டை வீடியோவாக விஷால் வெளியிட்டு இருக்கிறார்.
#Corruption being shown on silver screen is fine. But not in real life. Cant digest. Especially in govt offices. And even worse happening in #CBFC Mumbai office. Had to pay 6.5 lacs for my film #MarkAntonyHindi version. 2 transactions. 3 Lakhs for screening and 3.5 Lakhs for… pic.twitter.com/3pc2RzKF6l
— Vishal (@VishalKOfficial) September 28, 2023