ரிவியூவர் பிரசாந்தை திட்டி தீர்த்த 'முருங்கைக்காய் சிப்ஸ்' பட இயக்குனர்!

Murungaikkai Chips Srijar ItisPrashanth
By Parthiban.A Dec 16, 2021 11:20 AM GMT
Report

சாந்தனு மற்றும் அதுல்யா நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஏ சர்ட்டிபிகேட் படம் என்பதாலும், முதலிரவு பற்றிய கதை என்பதாலும் விமர்சனங்களை சாதித்து இருக்கிறது இந்த படம்.

பிரபல விமர்சகர் பிரசாந்த்தும் நெகடிவ் ஆக தான் விமர்சனம் பதிவு செய்து இருக்கிறார். அதை பார்த்த இயக்குனர் ஸ்ரீஜர் பதிலடி கொடுக்கும் விதத்தில் முகநூலில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் இட் இஸ் பிரசாந்தை கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது..

"Paid Reviewer Prashanth @itisprashanth அவர்களுக்கு.. முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீஜர்.. சமீபத்தில் எனது இயக்கத்தில் வெளிவந்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தைப் பற்றி தாங்கள் மிக மோசமான ஒரு விமர்சனம் செய்திருந்தீர்கள்.. ஒரு திரைப்படத்தை இயக்கிவிட்டு வந்து விமர்சனம் செய்யுங்கள் என்று உங்களிடம் கூற மாட்டேன்.. காரணம் அது அறிவு சார்ந்தது..

நிற்க தாங்கள் ஏதோ இந்த சமூகத்தை காப்பாற்ற வந்த புனிதர் போலவும்.. நான் ஏதோ இந்த சமூகத்தை சீரழிக்க வந்தவன் போலவும் பேசி இருக்கிறீர்.. உங்களுக்கு ஏன் இந்த வன்மம்.. உங்களுக்கு paid Reviewer Prashanth என்றொரு பெயர் இருக்கிறது என்பதை இந்த நாடே அறியும்.. தயாரிப்பாளர் உங்களுக்கு பணம் தரவில்லை என்று சொன்னால் உங்கள் விருப்பத்துக்கு விமர்சனம் செய்வீர்கள்.. முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் பெருவாரியான மக்களுக்கு பிடித்த படம்.. இளைஞர்கள் கொண்டாடும் திரைப்படம்.. உங்களது தவறான விமர்சனத்தால் நிறைய பேரை குழப்பி விட்டிருக்கிறீர்கள்..

ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இந்த திரைப்பட த்தை அனுபவியுங்கள் ஆராய வேண்டாம் என்று கூறி வருகிறோம்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் அடல்ட் ஜோக்கிற்கு பெண்கள் சிரித்து மகிழ்கிறார்கள் என்று பலர் எனது முக நூல் பக்கத்திலும் WhatsApp லும் எழுதி வருகிறார்கள்.. அதுதான் இந்த படத்திற்கு சரியான விமர்சனம்..

நிற்க எனது தயாரிப்பாளரைப் பற்றி தாங்கள் club house ல் தவறாக பேசி இருக்கிறீர்கள்.. எனது தயாரிப்பாளர் திரு.ரவீந்தர் சந்திரசேகரன் அவர்கள் பெரிய அளவில் சினிமாவை நேசிக்கும் மனிதர்.. அவரைப் போன்றவர்களால்தான் சினிமா வாழ்ந்து கொண்டிருக்கிறது.. மேலும் நீங்கள் இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் தொழில்நுட்பம் பற்றி அறிவுபூர்வமான கேள்விகள் கேட்டிருந்தால் உங்களை அறிவாளியாக மதித்து நானே பதில் கூறி இருப்பேன்.. ஆனால் உங்கள் விமர்சனம் முழுவதும் பழி வாங்கும் நோக்குடன் வன்மம் கலந்து வெளிப்படுகிறது.. கிட்டத்தட்ட நான் இருபது வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறேன்.. நிறைய படிப்பவன்.. நிறைய திரைக்கதை பற்றிய நூல் அறிவும்.. தேடல்களும் உள்ளவன்.. என்னை அவ்வளவு சாதாரணமாக நீங்கள் எடை போட்டுவிட வேண்டாம்..

விமர்சனம் என்கிற பெயரில் நீங்கள் பால் குடிக்கும் தாயின் மார்பை அறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. அதில் வடியும் குருதியை பால் என நினைத்து குடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.. தாய் உயிருடன் இருக்கும் வரைதான் நீங்களும் உயிர் வாழ முடியும்.. என் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் போன்றோர் அந்த தாய்க்கு சமமானவர்கள்.. இந்த விமர்சனம் மூலம் வந்த பணத்தில் உங்கள் வீட்டு உலையில் கொதிக்கும் ஒவ்வொரு அரிசியும் என் தயாரிப்பாளர் உங்களுக்கு போட்ட பிச்சை.. அந்த சோற்றில் கை வைக்கும் போது உங்களுக்கு உடம்பு கூச வேண்டும்.. என் குடும்பம் உங்கள் குடும்பம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு அவர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் உணவளித்து வருகிறார்..

அவரால் நீங்கள் உங்கள் மனைவி குழந்தைகள் பசியாறுகிறீர்கள்.. ஆனால் உங்களால் அவர் தொழிலில் வருவாய் இழப்பு.. இதை நீங்கள் உணர்ந்தது உண்டா.. மேலும் உங்கள் மோசமான விமர்சனங்களுக்கு உள்ளான நிறைய இயக்குநர்கள் வளர்ந்து விட்டார்கள்.. ஆனால் நீங்கள்???? நான் என் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்து விட்டேன்.. என் தயாரிப்பாளரும் அடுத்த படத்தின் தயாரிப்பில் தீவிரமாகி விட்டார்.. ஆனால் நீங்கள் அடுத்து யாரிடம் கையேந்தலாம் என யோசியுங்கள்.. ஸ்ரீஜர் (முருங்கைக்காய் சிப்ஸ் இயக்குநர்).

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US